search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரி சோதனை"

    • சச்சிதானந்தம் சமீபத்தில் 150 சரக்கு வாகனங்களை வாங்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • சச்சிதானந்தம் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் சக்தி நகர் 3-வது கிராசை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (65). இவர் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் குறிப்பிட்ட மதுபான நிறுவனங்களில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு வந்து குடோன்கள் மற்றும் கடைகளுக்கு சப்ளை செய்யும் ஒப்பந்தம் எடுத்து உள்ளார்.

    இந்த நிலையில் இவர் சமீபத்தில் 150 சரக்கு வாகனங்களை வாங்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 26-ந் தேதி முதல் இவரது வீடு மற்றும் செங்கோடம்பாளையத்தில் உள்ள இவரது டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இன்று 4-வது நாளாகவும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே சோதனை நடத்த வந்த அதிகாரிகளின் ஒரு பிரிவினர் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதுப்பற்றி வருமான வரித்துறை வட்டாரத்தில் கேட்டபோது வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்களை ஆய்வு செய்ய அழைத்து சென்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் எங்கு விசாரணை நடத்தப்படுகிறது? எந்த வங்கிக்கு அவரை அழைத்து செல்கிறார்கள் என்று எந்த விபரமும் வெளியிடவில்லை.

    • கரூரில் நடந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்தனர்.
    • கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் சோதனையிட சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    கரூரில் நடந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்தனர். இதனால் பிரச்சனை உருவானது. தி.மு.க.வினரின் எதிர்ப்பு காரணமாக முதல் நாளில் கரூரில் வருமான வரி சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது. கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் சோதனையிடச் சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    இதனால் அங்கு சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் பாதுகாப்பு கருதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபோல் ராயனூரிலும் அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அந்த புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேரும், ராயனூர் சம்பவத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த வழக்கு தொடர்பாக கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • சோதனையிடச் சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
    • அதிகாரிகளை திமுகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கரூரில் நடந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தடுத்தனர். இதனால் பிரச்சனை உருவானது. திமுகவினரின் எதிர்ப்பு காரணமாக முதல் நாளில் கரூரில் வருமான வரி சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது.

    கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் சோதனையிடச் சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் பாதுகாப்பு கருதி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல் ராயனூரிலும் அதிகாரிகளை திமுகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 6 பேரும், ராயனூர் சம்பவத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • சச்சிதானந்தம் மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று டாஸ்மாக் குடோன்கள் மற்றும் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு சென்று வருகிறார்.
    • சச்சிதானந்தம் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பள்ளம் சக்தி நகர் 3-வது கிராசை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் சொந்தமாக லாரிகள் வைத்து குறிப்பிட்ட நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் பெற்று மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று டாஸ்மாக் குடோன்கள் மற்றும் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு சென்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இவரது வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரது வீட்டு முன்பு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் சோதனை நடந்து வருகிறது. இன்று காலை 10.20 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    • துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதேபோல், கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து, அதிகாரிகள் நேற்று இரவு மீண்டும் துணை மேயர் வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

    துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக தேர்தல் தோல்வி பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.
    • எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படும் நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தல் தோல்வி பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. கர்நாடக தேர்தல் முடிவானது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காக அமலாக்கத்துறை, ஐடி, சிபிஐ ஆகியவற்றை பாஜக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத நேரத்தில் திட்டமிட்டே பாஜக ஐடி ரெய்டை நடத்துகிறது. முதல்வர் வெளிநாட்டு பயணம் மூலம் முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில் அதை திசை திருப்ப இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    கரூர், கோவை உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற்றுத் தந்த செந்தில் பாலாஜியை முடக்க திட்டமிட்டு ஐடி சோதனை நடத்தப்படுகிறது.

    திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தவே போலீசுக்கு தெரிவிக்காமல் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எத்தனை சோதனை நடத்தினாலும் திமுகவுக்கு கவலையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சோதனை நடைபெற்ற சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இருந்தார்.
    • மேலாண்மை இயக்குனர் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் மின்சார மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனை நடைபெற்ற சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இருந்தார். ஆனால் அவரது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை.

    அவர் வழக்கம்போல் சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சம்பந்தமான ஆய்வு கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. இதில் மேலாண்மை இயக்குனர் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் செந்தில் பாலாஜி வந்தபோது ஐ.டி. சோதனை குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், என்னுடைய வீடுகளில் சோதனை எதுவும் நடக்கவில்லை. என் தம்பி மற்றும் அவருடைய நண்பர்கள், தெரிந்தவர்களின் வீடுகளில் அலுவலகங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது.

    அதைப்பற்றி நான் இப்போது பேசுவது சரியாக இருக்காது என்று கூறிவிட்டு கூலாக கடந்து சென்றார்.

    • கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
    • சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கரூர்:

    தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதிகளில் இந்த சோதனையானது நடக்கிறது. டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

    இந்நிலையில் கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இதேபோல் மற்ற இடங்களிலும் அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு பணியை செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறுத்தப்பட்டது. 8 வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் கலந்துபேசி முடிவு செய்வார்கள்.

    • சாரதா மோட்டார்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
    • சோதனை முடிவில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    செங்கல்பட்டு:

    கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது.

    செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வளாகத்தில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரிதுறை அதிகாரிகள் சுமார் 10 பேர் இன்று காலையில் சென்றனர். அவர்கள் சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் இரவு பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் நிறுவனத்தின் வளாகத்திலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். காலையில் பணிக்கு வந்தவர்கள். மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோன்று இருங்காட்டுக்கோட்டை, சோமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்திலும் இன்று சோதனை நடைபெற்றது.

    சாரதா மோட்டார்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    சோதனை முடிவில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    • கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
    • தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் 4 கார்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். மருத்துவமனைக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே நேரம் மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் தங்களது சோதனைகளை நடத்தினர். மருத்துவமனையில் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறையிலும் நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருமுட்டை விற்பனை வழக்கில் இந்த தனியார் மருத்துவமனையின் கருத்தரித்தல் மைய ஆய்வகத்துக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சீல் அகற்றப்பட்டு ஆய்வகம் தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் இந்த தனியார் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திண்டுக்கல்-கரூர் சாலையில் தாடிக்கொம்பு பகுதியில் வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • மதுரையில் இருந்து வந்த 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சோதனை மேற்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-கரூர் சாலையில் தாடிக்கொம்பு பகுதியில் வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் வரிஏய்ப்பு தொடர்பாக புகார் எழுந்தது.

    இதனைதொடர்ந்து மதுரையில் இருந்து வந்த 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சோதனை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரி அலுவலகத்தில் உள்ள கணினி, மருந்தகம், டாக்டரின் அறை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையின்போது ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • எங்கள் நிறுவனத்திற்கும், எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • வரிகளை சரியான முறையில் செலுத்தும் நேர்மையான நிறுவனமாக எங்கள் நிறுவனம் என்றைக்கும் இருக்கும்.

    சென்னை:

    வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவன இயக்குநர் ராமஜெயம் என்கிற பாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் குறித்து விளக்கம் பெறும் விதமாக வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைகள் வழக்கமான ஒன்றுதான். அதுபோலத்தான் எங்கள் நிறுவனத்திலும் இந்த சோதனை இயல்பான ஒன்றே.

    கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆவணங்கள், எங்கள் நிறுவனம் இதுவரை விற்ற நிலங்கள், தற்போது விற்பதற்காக வைத்திருக்கும் நிலங்கள், அதற்கான நிதி ஆதாரம் போன்ற அனைத்தையும் தயங்காமல் சமர்ப்பித்திருக்கிறோம்.

    எங்கள் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி விதிகளுக்கும், இந்தியாவின் பொருளாதார சட்டங்களுக்கும் உட்பட்டே செயல்படுத்தப்படுகிறது என்பதை உறுதியாக மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஆதாரம் இல்லாமல் சில தனிநபர்கள் பரப்பி வரும் பொய் குற்றச்சாட்டுகளை ஜி ஸ்கொயர் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. வருமான வரித்துறை நடத்திய இந்த விரிவான விசாரணைகள் மூலம் எங்கள் நிறுவனத்திற்கும், எந்த அரசியல் கட்சிக்கோ அவர்களின் குடும்பத்தினருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு ரூ.38000 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக வெளியான ஆதாரமற்ற கூற்றும் நிரூபிக்கப்பட்டு இன்று உண்மை உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    சில செய்தி சேனல்கள் மற்றும் தனி நபர்கள் சிலர், எங்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை குறித்து வெளியிட்ட பொய்யான தகவல்கள் ஏற்புடையதல்ல. குறிப்பாக இந்த வருமான வரி சோதனையின்போது எங்களிடமிருந்து ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம்.

    இதுபோன்ற குற்றச்சாட்டுகளும் தவறான வழிநடத்தலும், எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.

    ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் உள்ளது. எங்கள் நிறுவனத்தின் மூலமாக 33 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். வருமான வரி, ஜிஎஸ்டி வரி மற்றும் முத்திரைத்தாள் வரிகள் உள்பட முறையாக மாநில அரசுக்கு வரியாக கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு மேல் செலுத்தி உள்ளோம். வரிகளை சரியான முறையில் செலுத்தும் நேர்மையான நிறுவனமாக எங்கள் நிறுவனம் என்றைக்கும் இருக்கும்.

    எங்களின் வணிகம் எப்போதும்போல் தொடர்ந்து நடைபெறும் என்பதை எங்கள் பங்குதாரர்களுக்கு உறுதியளிக்கிறோம். இதுபோன்ற நேரத்தில் எங்கள் மீது நீங்கள் வைத்திருந்த புரிதல்களையும், ஒத்துழைப்பையும் பெரிதும் மதிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×